கோட்டாகோகமவிற்கு பிறகு இலங்கையில் உருவான மற்றொரு கிராமம் (Photos)


கோட்டாகோகமவிற்கு பிறகு இலங்கையில்  மற்றொரு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடுபவர்களால் இது உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் எனக் கோரி கடந்த இரு தினங்களான அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த போராட்டகார்கள் அருகில் தற்காலிக கூடாரங்களை அமைந்துள்ளதுடன் அதற்கு மைனா கோ கம (கிராமம்) என பெயரிட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் கடந்த 19 நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருவதுடன் அந்த இடத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏற்கனவே கோட்டா கோ கம (கிராமம்) என பெயரிடப்பட்டுள்ளனர்.

அலரி மாளிகைக்கு எதிரில் நடத்தப்படும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் உத்தரவை பெற கொள்ளுப்பிட்டி பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர்.

எனினும் அவ்வாறான உத்தரவை பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. எனினும் ஏதேனும் கலவரமான சம்பவங்கள் நடந்தால், பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியும் என நீதிமன்றம் கூறியிருந்தது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் எனக் கோரி கடந்த இரு தினங்களான அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மேலதிக தகவல் – ஸ்டீபன் 

Gallery

Gallery

Gallery

GallerySource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.