துணைவேந்தர்கள் நியமன சட்ட மசோதாவை திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நிறைவேற்றி உள்ளது – அண்ணாமலை

சென்னை: 
தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை சட்டப் பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது அறிமுகம் செய்தார். அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அ.தி.மு.க. உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் தெரிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர்.
துணை வேந்தர் மசோதா பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக சட்டதிருத்த மசோதா காரசார விவாதங்களுடன் சட்டப்பேரவையில் நிறைவேறியது. 
இந்நிலையில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவை திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நிறைவேற்றி உள்ளது சங்கடமாக உள்ளது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
நம்முடைய தமிழக சட்டப்பேரவையில் துணை வேந்தர்களை நேரடியாக மாநில அரசே நியமனம் செய்வதற்காக ஒரு சட்ட மசோதாவை கொண்டு வந்திருக்கின்றார்கள். இதனை எதிர்த்து பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள். நேராக நியமனம் செய்யவில்லை. அப்போது பேசிய முதலமைச்சர் அவர்கள் நிறைய காரணங்கள் சொல்லி இருக்கின்றார்கள்.
குறிப்பாக 1949ல் இருந்து பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலமான குஜராத்தில் இந்த நடைமுறை உள்ளது. அருகிலுள்ள ஆந்திராவில் உள்ளது. சமீப காலகட்டத்தில் கேரளாவில் கொண்டு வருவதாக சொல்லி இருக்கிறார். சட்டப்பேரவையில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவைவை பாஜக எதிர்த்தது. ஆளுநரே எந்த துணைவேந்தர்களையும் நேராக நியமனம் செய்யவில்லை. தேர்வுக் குழுவின் பரிசீலனையிலும் இது நடைபெறுகிறது.
துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசின் தலையீடும் உள்ளது. திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது. மாநிலத்தில் ஆளுகின்ற ஆட்சியைக் கலைக்க ஆரம்பித்தார்களோ அப்பொழுது இருந்து ஆளுநர் என்ற பதிவுக்கு முக்கியத்துவம் கூடியிருக்கிறது. தமிழகத்திலும் அப்பொழுதெல்லாம் அரசியல் தலையீடு அதிகமாக இருந்து.
துணைவேந்தரை நாம்தான் நியமிக்க வேண்டும் என சொல்லும் பொழுது பலர் துணைவேந்தர்கள் மீது லஞ்ச ஊழல் போன்ற புகார்கள் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தி.மு.க. துணை வேந்தர்கள் என்ற பதவியை ஒரு வியாபாரப் பொருளாக ஆளும் கட்சியை சார்ந்த, ஆளும் கட்சியை ஆதரிக்கக் கூடிய மனிதனுக்கு கொடுக்கக்கூடிய பதவியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் சங்கடமாக உள்ளது என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.