இலங்கை-க்கு குட் நியூஸ்: உலக வங்கி 600 மில்லியன் டாலர் கடன்.. பங்குச்சந்தை உதவி..!

பொருளாதாரச் சரிவாலும், விலைவாசி உயர்வாலும் தவித்து வரும் இலங்கை-யிடம் அத்தியாவசிய பொருட்களை வெளிநாட்டிலிருந்து வாங்குவதற்காகப் போதுமான அன்னிய செலாவணி இல்லாத நிலையில், இந்தியக் கடன் அடிப்படையில் டீசல், பெட்ரோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

எல்ஐசி ஐபிஓ மே 4 தொடக்கம்.. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன..!

இந்நிலையில் இலங்கைக்குச் சாதகமாக உலக வங்கி வெளியிட்ட அறிவிப்பு மூலம் அந்நாட்டு அரசு, மக்கள், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

 உலக வங்கி உதவி

உலக வங்கி உதவி

அத்தியாவசிய பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கான நிதியியல் தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்காக இலங்கைக்குச் சுமார் 600 மில்லியன் டாலர் அளவிலான கடனை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.

600 மில்லியன் டாலர்

600 மில்லியன் டாலர்

இந்த 600 மில்லியன் டாலர் கடனில் முதல் பகுதியாக 400 மில்லியன் டாலர் அளவிலான பணத்தை உலக வங்கி விரைவில் இலங்கைக்கு அளிக்கும் என இலங்கை அதிபர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்குத் தொடர்ந்து உதவுவதாக உலக வங்கி கூறியுள்ளது.

இலங்கை பங்குச்சந்தை
 

இலங்கை பங்குச்சந்தை

2 வாரம் மூடப்பட்டு இருந்த இலங்கை பங்குச்சந்தை கடந்த 2 நாட்களாக அதிகப்படியான சரிவை எதிர்கொண்ட நிலையில் வர்த்தகம் துவங்கிய சில மணிநேரத்தில் மூடப்பட்டது. இதனால் அந்நாட்டுப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டனர்.

5 சதவீதம் உயர்வு

5 சதவீதம் உயர்வு

இந்த நிலையில் உலக வங்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து கொழும்பு அனைத்துப் பங்குகள் குறியீடு 5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. 2 நாட்களாக 15 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்த இலங்கை பங்குச்சந்தைக்கு இன்றைய உயர்வு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதேபோல் S&P 20 பங்குகள் கொண்ட குறியீடு இன்று 7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்தது.

நிதி நெருக்கடி

நிதி நெருக்கடி

1948 ஆம் ஆண்டுச் சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கையின் மிக மோசமான நிதி நெருக்கடியை தற்போது சந்தித்து வருகிறது. இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த இரண்டு வருடங்களில் 70 வீதமாக வீழ்ச்சியடைந்து மார்ச் மாத இறுதியில் 1.93 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

 அத்தியாவசியப் பொருட்கள்

அத்தியாவசியப் பொருட்கள்

இதன் மூலம் எரிபொருள், மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் இலங்கை தவித்து வந்த நிலையில் தான் உலக வங்கி சுமார் 600 மில்லியன் டாலர் அளவிலான கடன் உதவியை அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

SriLanka: World Bank provides $600m financial assistance Stock market Rebound after april 5

SriLanka: World Bank provides $600m financial assistance Stock market Rebound after april 5 இலங்கை-க்குக் குட் நியூஸ்: உலக வங்கி 600 மில்லியன் டாலர் கடன்.. பங்குச்சந்தை உதவி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.