"கவர்ச்சியான பாடல்களில் நடிப்பது ஒரு பெண்ணியவாதியாக என்னைப் பாதிப்பதில்லை!"- ரெஜினா கெஸாண்ட்ரா

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து வருபவர் ரெஜினா கெஸாண்ட்ரா. சமீபத்தில், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து இவர் நடனமாடியப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இது குறித்து பேசிய ரெஜினா,

“தொடர்ந்து நிறையப் படங்களில் நடனம் ஆட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது அல்லது பாடல்களில் நடமாடுவது ஒருவகையான பிம்பத்தை உருவாக்கும் என்பதால் தற்போது அவற்றைத் தேர்வு செய்வதில்லை. கவர்ச்சியான பாடலாக இருந்தாலும் கொண்டாட்டமான பாடலாக இருந்தாலும், இது எதுவும் ஒரு பெண்ணியவாதியாக என் சித்தாந்தத்தைப் பாதிப்பதில்லை” என்று மனம்திறந்து பேசியுள்ளார் ரெஜினா.

ரெஜினா

இது பற்றி விரிவாகப் பேசிய அவர், “சில வருடங்களுக்கு முன்பு, நடிகர் சிரஞ்சீவியுடன் எனக்கு ஒரு பாடலில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதன்பிறகு, அதேபோன்ற பாடல்களில் நடனம் ஆடப் பல வாய்ப்புகள் கிடைத்தன. நான் ஒரு படத்தில் நடனம் ஆடினேன் என்றால், அதேபோல் ஏன் இன்னொரு படத்தில் அதை செய்யமுடியாது என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். இது ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிம்பத்தை உருவாக்குகிறது என்பதால் அவற்றைத் தவிர்க்கிறேன். எந்த விஷயத்தைச் செய்தால் என் எதிர்காலம் நன்றாக இருக்குமோ அதைச் செய்வேன். சிரஞ்சீவியுடன் நடனம் ஆடுவது எனது பக்கெட் லிஸ்டில் ஒன்று. அதனால் அதைச் செய்தேன்” என்று கூறினார்.

கவர்ச்சியான பாடல்களில் நடிப்பது குறித்துப் பேசிய ரெஜினா, “கவர்ச்சியான பாடல்களில் நடிப்பதால் ஒரு பெண்ணியவாதியாக அது என் சித்தாந்தத்தைப் பாதிப்பதில்லை. அது பற்றி விமர்சனம் வந்தாலும் அதற்கெல்லாம் நான் கோபப்படுவதில்லை. உருப்படியான நல்ல பாடலாக இருந்தாலும் சரி, கொண்டாட்டப் பாடலாக இருந்தாலும் சரி, ஒரு நடிகையாக இருப்பதால் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை” என்றும் கூறினார்.

ரெஜினா கெஸாண்ட்ரா

மேலும், எதைச் செய்தாலும் கேள்விகள் கேட்பார்கள் என்று கூறிய அவர், “எல்லாவற்றையும் நாம் கேள்வி கேட்கத் தொடங்கும் போது, நமக்குப் பதில் இல்லாமல் போய்விடும். ஒரு பாடலுக்கு நடனமாடுவது, வலிமையான பெண்ணாக நடிப்பது அல்லது திரையில் கொலை செய்வது என ஒவ்வொரு காட்சியையும் ஒரு நடிகையாக ரசிப்பேன். இது அனைத்தும் கலையின் ஒரு பகுதி. ஒரு நடிகராக, நான் பல விஷயங்களைச் செய்யப் போகிறேன் என்று என்னைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.