25-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், அதன் முதல் பெண் விளம்பரத்தூதராக ஜான்வி கபூரைக் களம் இறக்குகிறது Zebronics

மும்பை: Zebronics 25-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், அதன் முதல் பெண் விளம்பரத்தூதராக ஜான்வி கபூரைக் களம் இறக்குகிறது. சமூக ஊடகங்களில் பரபரப்பாக பங்கேற்கும் Gen Z நடிகை நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வார். இந்தியாவின் முன்னணி IT சாதனங்கள், வாடிக்கையாளர் மின்னணு சாதனங்கள் மற்றும் அணிந்து கொள்ளும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பாளரான Zebronics, #ZebronicsForLife பிரச்சாரத்துடன் தங்களுடைய ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஒலி சார்ந்த சாதனங்களுக்கான விளம்பரத் தூதராக ஜான்வி கபூரை களமிறக்கியுள்ளது.சுதந்திர எண்ணம் கொண்ட இந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள், இசை ஆர்வலர்கள் மற்றும்  அவர்கள் குழுவோடு இணைந்து அதிர்வலைகளை உருவாக்குபவர்களை கொண்டாடுகிறோம். இளம் இரத்தங்களின் துடிப்பை வெளிப்படுத்தவும் மற்றும் புரிந்து கொள்ளவும், மேலும் அவர்களின் தனிப்பட்ட ஒலி மற்றும்  உடற்பயிற்சி தேவைகளுக்கும், பெருவாரியான மக்களின் தேவைகளுக்கேற்ப சிறந்த தரம், இறுக்கமான பிடிப்பு, கண்கவர் வண்ணங்களுடன் அவர்களின் “பெருவாரியானவர்களுக்கான சிறந்தவை” என்ற நோக்கத்துடன் ஒத்துப்போகும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளின் விரிவான வரிசையை Zebronics கொண்டுள்ளது.Zebronics ஈர்க்கக்கூடிய அம்சங்கள், உயர்தர கட்டமைப்பு, வித்தியாசமான பாணி மற்றும் பலவற்றுடன் தனித்து நிற்கும் உயர் ரக தயாரிப்புகள் மூலம் தொழில்நுட்ப இடைவெளியை நிரப்புகிறது. இந்த புகழுக்கும் மற்றும் பிரபலத்துக்கும் வலுச்சேர்க்கும் வகையில், நிறுவனம் இளமையின் அடையாளமான Gen Z, ஜான்வி கபூரை விளம்பரத் தூதராக நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது. இந்த பாலிவுட் பிரபலம் அவருடைய உற்சாகமான தன்மை, கச்சிதமான நளினம் மற்றும் அவர் செல்லுமிடமெல்லாம் அவர் உண்டாக்கும் உயிர்ப்புத்தன்மை ஆகியவற்றிற்காக அடையாளம் காணப்படுகிறார். இது Zebronics வழங்கும் புதுயுக தயாரிப்புகளை கச்சிதமாக பிரதிபலிக்கிறது.“நான் Zebronics-இன் பிரதிநிதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். தனித்துவமான அம்சங்கள், உயர்தர கட்டமைப்பு மற்றும் வசீகரிக்கும் வடிவமைப்பு ஆகியவற்றுடன் கூடிய கவரக்கூடிய வகையிலான ஒலி சார்ந்த மற்றும் அணியக்கூடிய சாதனங்களின் வரிசையில் நிறுவனம் வழங்குகிறது. என்னுடன் மிக நெருக்கமாக தொடர்புடைய இன்னொரு விஷயம் என்னவென்றால், தயாரிப்புகள் அடிக்கடி மேம்படுத்தப்படுகின்றன. எந்தத் துறையிலும், நீங்கள் தொடர்ந்து முன்னணியில் இருக்க வேண்டுமென்றால் தொடர்ந்து உங்கள் திறமையை நீங்களே வளர்த்துக் கொள்ளவேண்டும். இந்த நிறுவனம் அதற்கும் மேலாகவே செய்கிறது. உங்களை தனித்துவமாகக் காட்டும் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட இத்தனை வகையான தேர்வுகள், வண்ணங்கள் மற்றும் வகைகள் உங்களுக்குத் தேர்வு செய்வதில் சிரமத்தை ஏற்படுத்தும்” என்று ஜான்வி கபூர் கூறுகிறார். இந்த கூட்டணியைப் பற்றி பேசுகையில், திரு. ராஜேஷ் தோஷி, இணை-நிறுவனர் மற்றும் இயக்குனர், Zebronics கூறுகிறார் “தற்போதைய சந்தை மிக வேகமாக மாறிவருகிறது, இதுவரையில் இல்லாத வேகத்தில் தயாரிப்புகள் சந்தைக்கு வருகின்றன. எங்களுடைய உயர்தர வரிசை டால்பி ஒலிபெருக்கிகள், அலெக்ஸா வசதியுள்ள தயாரிப்புகள், வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் பல தயாரிப்புகள் மூலம் பெருவாரியான மக்களுக்காக முடியாததை முடித்துக் காட்டியுள்ளோம். சமீப வருடங்களில் எங்களது ஸ்மார்ட் வாட்ச் பிரிவு பன்மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் மூலம் எங்கள் நிறுவனம் எப்பொழுதும் கொண்டிருக்கும் “பெருவாரியானவர்களுக்கான உயர்தரம்” என்ற நோக்கத்தை எட்டியுள்ளோம். ஜான்வி கபூர் இளைஞர்களின் பிரதிநிதியாக மட்டுமல்லாமல், வேறு யாரிடமும் இல்லாத அளவிற்கு உற்சாகமும் புத்துணர்ச்சியும் அவரிடம் நிரம்பியுள்ளது. நளினம் மற்றும் செயல்பாட்டுடன் முடியாததை முடித்துக் காட்டுவதில் நம்பிக்கை கொள்வதில் எங்கள் நிறுவனத்தின் வடிவமைப்பு, நளினம் மற்றும் செயல்பாடு ஆகியவை ஒரே கோட்டில் இணைந்துள்ளது.”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.