அட, இதுக்கு பேரு எலக்ஷனா? 75 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை அறிவித்த அ.தி.மு.க

அதிமுக உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடந்த நிலையில், அதிமுக தலைமை, கட்சியின் 75 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை அறிவித்துள்ளது. ஏற்கெனவே இருந்த நிர்வாகிகள்ல் எந்த மாற்றமும் இல்லாததால், அட இதுக்கு பேரு எலக்ஷனா என்று பலரும் கம்மெண்ட் அடித்து வருகின்றனர்.

அதிமுக உட்கட்சித் தேர்தல் நடந்த நிலையில், அதிமுக தலைமை புதன்கிழமை அக்கட்சியின் 75 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளின் பெயர்களை அறிவித்து முதல்கட்ட பட்டியலை வெளியிட்டது. அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் நடந்தாலும் கட்சியின் முக்கிய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அதனால், பெரும்பாலும் எந்த மாற்றமும் இல்லாததால் இதுக்கு பேரு எலக்ஷனா என்று கேட்கும் விதமாக அமைந்துள்ளது.

அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் அவரவர் மாவட்டச் செயலாளர் பதவியைத் தக்க வைத்துக் கொண்ட நிலையில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆதரவாளராகக் கருதப்படும் ஆர்.இளங்கோவன், பழனிசாமிக்கு பதிலாக சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

அதிமுக வெளியிட்ட அறிவிப்பின்படி, அதன்படி, “வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளராக ஆதிராஜாராம், தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்தியா, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளராக எம்.கே. அசோக், செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலாளராக சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக அருண்மொழிதேவன்.

சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக இளங்கோவன், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக வெங்கடாசலம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளராக குமரகுரு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளராக பாலகிருஷ்ணா, தருமபுரி மாவட்டச் செயலாளராக கே.பி.அன்பழகன், ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளராக ராமலிங்கம், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக கருப்பணன், திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன்.

திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட மாவட்டச் செயலாளராக உடுமலை ராதாகிருஷ்ணன், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கரூர் மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளராக வைத்தியலிங்கம், மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக ஆர்.பி.உதயக்குமார், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்” உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக உட்கட்சித் தேர்தல் நடந்த நிலையில், 75 மாவட்டங்களின் நிர்வாகிகள் என அறிவிக்கப்பட்டுள்ளவர்களில் அதிமுக முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் தங்கள் இடங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளனர். எந்த மாற்றமும் இல்லை என்பதால் அட இதற்கு பேரு எலக்ஷனா என்று பலரும் கம்மெண்ட் அடித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.