சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், கோட்டம் 162, கண்ணன் காலனியில் உள்ள மயான பூமியின் எரிவாயு தகன மேடையை திரவ பெட்ரோலிய தகன மேடையாக மாற்றம் செய்திடவும், அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாலும் வரும் 9ம் தேதி முதல் ஜூலை 8ம் தேதி வரை 2 மாத காலங்கள் இந்த மயானபூமி இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகில் உள்ள வார்டு 163க்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
