சென்னை: உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் கோடை விடுமுறைகால நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள் கோட்டு மட்டும் அணிந்தால் போதும் மேல்கவுன் அணிய தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.கவுன் அணிய விலக்கு கோரி மெட்ராஸ் பார் அசோசியேசன் வைத்த கோரிக்கையை ஏற்றுதலைமை நீதிபதியின் அறிவுறுத்தலின்படி, கோடை விடுமுறை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் கோட்டு மற்றும் கழுத்து பேண்ட் மட்டும் அணிந்தால் போதும், அதன் மீது அணியும் கருப்பு கவுன் அணிய தேவையில்லை என்று பதிவாளர் ஜெனரல் பி.தனபால் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.
