வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை,-”வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு, சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்.
![]() |
ஆனால், அது தேவையான நடவடிக்கை,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.ரிசர்வ் வங்கிவங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி, ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 2018 ஆகஸ்டுக்குப் பின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடந்த விழாவில், கொரோனா காலத்தில் சிறப்பான பொருளாதார நடவடிக்கைகள் எடுத்ததற்காக, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது நிர்மலா சீதாராமன் கூறியதாவது:வங்கிக் கடன் வட்டி விகிதத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. வட்டி விகிதம் தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களுக்கு இடையே இந்த அறிவிப்பு வெளியானதால் சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கலாம்.
![]() |
ஆனால், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது.சரியான நடவடிக்கைரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணய் வாங்கப்படுகிறது. விலை தள்ளுபடியுடன் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா தயாராக இருந்தது. சர்வதேச அளவில் தற்போதுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது சரியான நடவடிக்கையே.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement