ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள சங்கனேரியில் நடந்த விழாவில் பேசிய மாநில முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட், பாஜக, ஆர்.எஸ்.எஸ். உடன் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பகையும் இல்லை என்றார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் தம்மை சந்தித்ததாகவும், அப்போது எங்களுக்கு யாருடனும் பகையில்லை என்பதை தெரிவித்ததாகவும் கூறினார்.
இதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் பிரதமர் மோடியிடம் தெரிவிக்கச் சொன்னதாகவும், அனைவரையும் நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பது நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும் என்றும் அசோக் கெலாட் குறிப்பிட்டார்.
ஆனால் வன்முறை எந்த வடிவத்தில் நிகழ்ந்தாலும் பொறுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறிய அவர், வன்முறையை யாரும் ஏற்கக் கூடாது என்றும், ஆட்சியில் இருப்பவர்கள் எந்தக் கட்சி, சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதைக் கண்டிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆதரவற்ற பசுக்களுக்காக நடத்தப்படும் மாட்டு தொழுவங்களுக்கு அரசு மானியம் 6 மாதங்களுக்கு பதிலாக 9 மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்…சட்டசபை வாசலில் காலிஸ்தான் கொடிகள்- இமாச்சல பிரதேசத்தில் பரபரப்பு