காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசி தப்பி சென்ற இளைஞர்.. சாமியார் வேடத்தில் இருந்தவனை தட்டி தூக்கிய காவல்துறையினர்..!

இளம்பெண் மீது ஆசிட் வீசி விட்டு திருவண்ணாமலையில் சாமியார் வேடம் அடைந்து மனிதன் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை அந்த பகுதியை சேர்ந்த நாகேஷ் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண்ணை தொந்தரவு செய்துள்ளார்.

 இதற்கு அந்தப் பெண் மறுக்கவே திருமணம் செய்யவில்லை என்றால் ஆசிட் அடித்து விடுவேன் எனவும் நாகேஷ் மிரட்டியுள்ளார். ஆனால் அந்த பெண் அவரின் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி அந்த பெண் மீது ஆசிட் வீசி விட்டு தலைமறைவானார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நான்கு தனிப்படைகள் அமைத்து நாகேஷை தேடி வந்தனர். அவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் செல்போனை ஆய்வு செய்தபோது அவர் திருவண்ணாமலை இருப்பது தெரியவந்தது. அவரின் புகைப்படம் அடங்கிய தகவல்களை குற்றவாளி என்ற போஸ்டரை திருவண்ணாமலை நகரம் முழுவதும் ஓட்டியனர்.

இதனையடுத்து அங்கு உள்ள தனியார் ஆசிரமம் ஒன்றிற்கு தியானத்திற்கு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அந்த ஆசிரமத்திற்கு மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர் அங்கு காவி வேட்டி தியானத்தில் ஈடுபட்டு வந்த நாகேஷ் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இதனையடுத்து, அவரை திருவண்ணாமலை நீதிமன்றத்தில் அனுமதி பெற்று பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.