கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பத்திரபதிவு அலுவலகம் முன்பு காங்கிரஸ் மாவட்டத் துணைத்தலைவர் மரத்தில் அய்யலுசாமி இன்று காலை தலைகீழாக தொங்கி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரை தூக்கில் போட வேண்டும்.
7 பேரில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை செய்யக்கோரி கோர்ட்டில் நடைபெற்று வரும் விசாரணையில தமிழக அரசு அவருக்கு ஆதரவாக செயல்படுவது தவறு ஆகும்.
ராஜீவ்காந்தியுடன் இறந்த 15 பேரில் 14 பேர் தமிழர்கள். அவர்களது குடும்பங்கள் அல்லல்படும் நிலையில் உள்ளன. அந்த குடும்பத்திற்கு உதவி செய்யாமல் குற்றவாளிகளுக்காக அனுதாபப்படுவது கண்டனத்திற்குரியது.
எனவே உடனடியாக ராஜீவ்காந்தியுடன் இறந்த குடும்பத்திற்கு தலா ரூ. 5 கோடி மற்றும் அரசு வேலையும், காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 2 கோடி மற்றும் அரசு வேலையும் வழங்க வேண்டும்.
தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை வாபஸ் பெற்று ராஜீவ்காந்தி மற்றும் அவருடன் இறந்த 15 பேர் கொலையில் நீதியை நிலை நிறுத்த வேண்டி தற்போது இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று அதிகாலை சுமார் 1 நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கைவிடுத்து அங்கிருந்து கலைந்து சென்றார்.