Oppo Pad Air: குறைந்த விலைக்கு பெஸ்ட் டேப்லெட்ட நாங்க தர்றோம் – ஒப்போ அதிரடி!

சீன நிறுவனமான
ஒப்போ
ஸ்மார்ட்போன்களைத் தொடர்ந்து பல கேட்ஜெட் தயாரிப்புகளில் ஈடுப்பட்டுள்ளது. அந்த வகையில், நிறுவனம் தற்போது புதிய டேப்லெட்டை உருவாக்கி வருகிறது. பட்ஜெட் விலையில் கொண்டு வரப்படும் இந்த “
Oppo Pad Air
” டேப்லெட், செக்மெண்டின் சிறந்த டேப்லெட்டாக விளங்கும் என நிறுவனம் நம்பிக்கை அளித்துள்ளது.

இந்த டேப்லெட்டில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 புராசஸர் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. இது எட்டு கிரையோ 265 கோர்கள் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான வேகம், அட்ரினோ 610 கிராபிக்ஸ் எஞ்சின், ஸ்னாப்டிராகன் X11 LTE மோடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

iPhone 15: வழிக்கு வந்த ஆப்பிள் – 2023’ல் டைப்-சி உறுதி!

ஒப்போ பேட் ஏர் சிறப்பம்சங்கள் (Oppo PAD Air Specifications)

இதில், 2000 × 1200 பிக்சல்கள், 60Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடன் கூடிய 10.36″ அங்குல எச்டி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் டாஸ்குகளை பயனர்கள் மேற்கொள்ள, ஒப்போ லைட் டேப்லெட்டுடன் பென் கொடுக்கப்படுகிறது.

புதிய ஒப்போ டேப்லெட்டில் 18W வாட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7100 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. நான்கு ஸ்பீக்கர்கள் கொண்ட டால்பி அட்மோஸ் ஆடியோ சிஸ்டம், மொழுதுபோக்கு அம்சத்தை மேம்படுத்துவதாக உள்ளது.

பின்புறத்தில் ஒற்றை கேமரா இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. செல்பிகாகவும் ஒரு கேமரா வழங்கப்படும். எனினும், இதன் சென்சார் அளவு குறித்து தகவல் வெளியாகவில்லை.

Nothing: நத்திங் போன் பிளிப்கார்ட்டில் வெளியாகிறது – டீஸ் செய்த நிறுவனம்!

மடிக்கக்கூடிய ஒப்போ போன்

Weibo சமூக வலைத்தளத்தில் டிஜிட்டல் அரட்டை நிலையம் என அழைக்கப்படும் ஒரு குழுவில், சமீபத்தில் ஒப்போவின் நெகிழ்வான திரையுடன் கூடிய புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியானது.

இந்த ஸ்மார்ட்போனானது Samsung Galaxy Z Flip3, Huawei P50 Pocket போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுடன் நேரடியாகப் போட்டியிடும். இதன் விலை சீனாவில் 5,000 யுவான் ($755 டாலர்) மதிப்பில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒப்பிடுகையில், சீனாவில் Samsung Galaxy Z Flip3 விலை 7,400 யுவான்களாகவும், Huawei P50 Pocket விலை 9,000 யுவான்களாகவும் உள்ளது.

நிறுவனம் Snapdragon 8 Gen 1+ SoC அடிப்படையிலான புதிய ஸ்மார்ட்போன் மாடலை வெளியிடுவது குறித்தும் பேச்சு வெளியாகியுள்ளது. இதன் விலை தோராயமாக 7,000 யுவான் ($1,060 டாலராக) இருக்கும் என்று கூறப்படுகிறது.

TikTok: விண்வெளியில் டிக்டாக் வெளியிட்ட பெண் – வைரல் வீடியோ!
ஒப்போ புராசஸர்

Oppo சமீபத்தில் ஸ்மார்ட்போன்களுக்காக அதன் சொந்த புராசஸரை உருவாக்கும் விருப்பத்தை அறிவித்துள்ளது. மேலும் இது கிட்டத்தட்ட தயாராக இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய SoC அடுத்த ஆண்டு கிடைக்கும் என்று தொழில்நுட்ப வட்டாரங்கள் கூறுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

Vivo, Realme, OnePlus உடனான Oppo இன் உறவைக் கருத்தில் கொண்டு புதிய சிப்செட் தயாரிக்கப்பட்டு வருகிறது. காரணம், இந்த சிப்செட்டை BBK எனும் ஒரு குடையின் கீழ் வரும் நிறுவனங்களால் தவிர்க்க முடியாது என்பது நினைவுக்கூரத்தக்கது.

மேலதிக செய்திகள்:

Android 13: ஆண்ட்ராய்டு 13இல் கிடைக்கும் 10 முக்கிய அம்சங்கள்!Google I/O 2022: பிக்சல் வாட்ச், பிக்சல் 6A, பிக்சல் பட்ஸ் என நிறைய இருக்கு – கூகுள் நிகழ்வுRussia Ukraine News: போர் காலத்தில் உக்ரைன் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் 5 ஆப்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.