அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு : 10 பேர் பலி

நியூயார்க்

நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிர் இழந்துள்ளனர்.

அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும்  ப்ரெண்ட்லி சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது.  நேற்று இந்த கட்டிடத்திற்குள் நுழைந்த ஒரு மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.  துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

காவல்துறையினர் அந்த நபரைச் சுற்றி வளைத்து  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் நிலைமைகள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.    இந்த சூப்பர் மார்கெட் நகரத்திற்கு வடக்கே சுமார் மூன்று மைல் (ஐந்து கிலோமீட்டர்) தொலைவில், கறுப்பர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவலில் இருப்பதை காவல்துறையினர் விட்டர் மூலம் உறுதிப்படுத்தினர்,   ஆயினும் அந்த நபரின் அடையாளம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை.   துப்பாக்கிச் சூட்டை அவர் இணையத்தில் நேரலையில் ஒளிபரப்பியிருக்கலாம் என்றும், அவர் இணையத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார் எனவும் ஒரு சில அமெரிக்க பத்திரிகைகளில் செய்து வந்துள்ளது.

இந்த விசாரணை அதன் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகவும், அதிகாரிகள் இன்னும் தெளிவான நோக்கத்தைக் கண்டறியவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பாட்டுள்ளது.  அதே வேளையில் இந்த துப்பாக்கிச் சூடு இனவெறியின் அடிப்படையில் நடந்திருக்கலாம் எனவும் காவல்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.