அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்


அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (46) சனிக்கிழமை இரவு டவுன்ஸ்வில்லுக்கு வெளியே சுமார் 50 கிமீ தொலைவில் கார் விபத்தில் உயிரிழந்தார்.

சைமண்ட்ஸ் சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஒரு கார் விபத்தில் சிக்கியதாக குயின்ஸ்லாந்து காவல்துறை அறிக்கை கூறுகிறது.

இதையும் படியுங்கள்: சூப்பர்மார்கெட்ர்டில் இராணுவ சீருடையில் வந்த நபர் திடீர் துப்பாக்கிச்சூடு! 10 பேர் பலியான சோகம் 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்

சைமண்ட்ஸ் ஹெர்வி ரேஞ்ச் கார் சாலையில் ஆலிஸ் ரிவர் பிரிட்ஜ் அருகே சென்று கொண்டிருந்தபோது, ​​அவரது கார் சாலையை விட்டு உருண்டு கவிழ்ந்தது என்று பொலிஸார் கூறுகின்றனர்.

மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர், ஆனால் காரில் இருந்த ஒரே நபரான சைமண்ட்ஸை காப்பாற்ற முடியவில்லை.

இதையும் படியுங்கள்: ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமரானதற்கு பின்னால் இவ்வளவு இருக்கிறதா!! ஜெயபாலன் சுவாரசிய தகவல்

மார்ச் மாதம் ஷேன் வார்ன் மற்றும் ராட் மார்ஷ் ஆகியோரின் துயர மரணத்தைத் தொடர்ந்து, இப்போது மூன்றாவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் சைமண்ட்ஸ் திடீரென விபத்தில் உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்

இதையும் படியுங்கள்: ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபரானார் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்! 

Gallery

Gallery

GallerySource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.