கர்நாடகா | சாலையில் தாக்குதலுக்கு உள்ளான பெண் வழக்கறிஞர்; உதவ யாரும் முன்வரவில்லை

பாகல்கோட்: கர்நாடக மாநிலத்தின் சாலையில் பெண் வழக்கறிஞர் ஒருவரை ஆண் ஒருவர், காட்டுத்தனமாக அடித்தும், உதைத்தும் உள்ளார். தாக்குதலுக்கு ஆளான வழக்கறிஞருக்கு யாரும் உதவ முன்வரவில்லை. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தாக்குதலுக்கு ஆளானது பெண் வழக்கறிஞர் சங்கீதா என தெரியவந்துள்ளது. அவரை அடித்தவர் அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் மகாந்தேஷ் என தெரியவந்துள்ளது. சங்கீதாவின் வயிற்றில் எட்டி உதைத்தும், கன்னத்தில் அறைந்தும் உள்ளார் அவர். அது வீடியோவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பலர் இருந்தும் அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை.

சங்கீதா மற்றும் மகாந்தேஷ் இடையே நீண்ட நாட்களாக முன்பகை இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றுள்ளது. தாக்குதலுக்கு ஆளான வழக்கறிஞர் சங்கீதா போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதே போல தொடர்ச்சியாக சங்கீதா தனக்கு தொந்தரவு கொடுத்து வருவதாக மகாந்தேஷ் புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல். கடந்த காலங்களில் இருவரும் இது போல பல முறை ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Trigger warning: A lawyer was brutally assaulted by a man named Mahantesh in Vinayak nagar, Bagalkot, Karnataka. <a href=”https://t.co/kZ3OpUeKbi”>pic.twitter.com/kZ3OpUeKbi</a></p>&mdash; Mohammed Zubair (@zoo_bear) <a href=”https://twitter.com/zoo_bear/status/1525485586135384064?ref_src=twsrc%5Etfw”>May 14, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.