கூகுள் பே அக்கவுண்டினை எப்படி தொடங்குவது..வங்கிக் கணக்கினை எப்படி இணைப்பது?

பண பரிமாற்ற முறைகளில் இன்று பல்வேறு தொழில் நுட்பங்கள் உட்புகுந்து விட்டன. மணிக் கணக்கில் வங்கிகளில் காத்திருந்து பணம் டெபாட்சிட் மற்றும் பணம் எடுக்க காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

ஆனால் இன்று அப்படி இல்லை, கேஸ் டெபாசிட், ஏடிஎம், யுபிஐ பரிவர்த்தனை என பல வசதிகள் வந்து விட்டன.

வாரத்தில் 4 நாள் வேலை.. விளைவு என்ன தெரியுமா?

இதன் மூலம் இலவசமாக பணத்தை அனுப்பவும், டெபாசிட் செய்து கொள்ள முடியும். இதன் பில்கள், இலவ்ச ஆன்லைன் ஷாப்பிங் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

வங்கிக் கணக்கு அவசியம்

வங்கிக் கணக்கு அவசியம்

கூகுள் பே கணக்கினை தொடங்க வங்கிக் கணக்கு அவசியம். வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியம். ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும். இன்டர்நெட் கனெக்சனும் இருக்க வேண்டும். எனினும் இதற்கு மற்ற கேஓய்சி ஆவணங்கள் எதுவும் இல்லை.

பதிவிறக்கம் செய்யுங்கள்

பதிவிறக்கம் செய்யுங்கள்

முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் கூகுள்பே செயலியினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதனை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்த பிறகு, உங்களது வங்கிக் கணக்குடன் அப்டேட் செய்யப்பட்ட மொபைல் எண்ணை அப்டேட் செய்யவும். அடுத்ததாக நெக்ஸ்ட் என்பதை கிளிக் செய்யவும்.

ஓடிபி கொடுத்து அப்டேட் செய்யவும்
 

ஓடிபி கொடுத்து அப்டேட் செய்யவும்

இது அடுத்த பக்கத்தில் தொடங்கும். அதில் உங்கள் மெயில் ஐடியினை கேட்கும். மெயில் ஐடியினை பதிவு செய்த பிறகு, அந்த பக்கத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ற பாக்ஸினை கிளிக் செய்து விட்டு நெக்ஸ்ட் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். இதன் பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனை பதிவு செய்யவும். சில சமயம் தானாகவே உள்ளீடு செய்து கொள்ளும்.

செக்யூரிட்டி கோடினை கொடுக்கவும்

செக்யூரிட்டி கோடினை கொடுக்கவும்

இதனை அப்டேட் செய்த அடுத்த பக்கத்தில் தொடங்கும். அதில் செக்யூரிட்டி கோடினை கேட்கும். அதில் ஸ்கீரினில் என்ன லாக் ஆப்சன் வைத்துள்ளீர்களோ அதனையே வைத்துக் கொள்ளலாம். அல்லது வேறு லாக் ஆப்சனையும் வைத்துக் கொள்ளலாம். இதில் உங்களது மொபைல் ஸ்கீரின் லாக் என என்பதை தேர்வு செய்யலாம். அல்லது Create Google PIN என்பதை தேர்வு செய்யலாம்.

கூகுள் பே சீக்ரெட் எண்

கூகுள் பே சீக்ரெட் எண்

இதன் மூலம் 4 இலக்க நம்பரை உருவாக்கலாம். இதனை உருவாக்கிய பின்னர் கூகுபே-யின் ஹேம் பேஜ் வரும். அதனை உங்கள் பேங்க் அக்கவுண்ட் உடன் இணைக்க வேண்டும். அப்படி இணைத்த பிறகு நீங்கள் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். அதெல்லாம் சரி எப்படி கேங்க் அக்க்கவுண்ட் உடன் இணைப்பது?

வங்கிக் கணக்கினை இணைக்கவும்

வங்கிக் கணக்கினை இணைக்கவும்

உங்களது கூகுள்பே கணக்கினை தொடங்கினால், மேலாக இடதுபுறம் உங்களுடைய பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் கீழாக வங்கிக் கணக்கை இணைக்க (Add bank Account) என்ற ஆப்சனை கொடுக்கவும். அது அடுத்த பக்கத்தில் தொடங்கும். இதில் உங்களின் வங்கி என்ன ஆப்சனோ அதனை கிளிக் செய்யவும். அந்த வங்கியினை கிளிக் செய்தால், அதன் பிறகு உங்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணினை கொடுக்கவும்.

மொபைலுடன் இணைத்திருக்க வேண்டும்

மொபைலுடன் இணைத்திருக்க வேண்டும்

அதில் உங்களது வங்கி கணக்கு உங்கள் போனுடன் அல்லது சிம் கார்டுடன் இணைத்திருக்க வேண்டும் என்ற ஆப்சன் வரும். அதனை செலக்ட் செய்த பிறகு, நீங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொபைல் மிபைனை தவிர வேறு எண்ணினை பயன்படுத்த விரும்பினால் Use different number என்ற ஆப்சனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெரிபிகேஷன் செய்யவும்

வெரிபிகேஷன் செய்யவும்

வெரிபிகேஷன் முடிந்துவிட்டால் பச்சை டிக் வரும். இது வந்தாலே உங்கள் கூகுள் பே கணக்குடன் இணைக்கப்பட்டு விட்டது என அர்த்தம். இதன் பிறகு நீங்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது என அர்த்தம். அதன் பிறகு உங்களது ஏடிஎம் கார்டினை இணைக்க வேண்டும். அதில் கார்டின் கடைசி ஆறு இலக்க நம்பரை கேட்கும். அதனை பதிவு செய்த பிறகு கார்டு எக்ஸ்பெய்ரி நம்பரை கேட்கும். அதனை கொடுத்த பிறகு உங்கள் மொபைல் எண்ணுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது என அர்த்தம். இதன் மூலம் மிக எளிமையான பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

how to create google pay account step by step? check here full detail

How to get started with Google Pay Account? How to register? Let’s see how to link a bank account.

Story first published: Sunday, May 15, 2022, 11:41 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.