கொழும்பில் திடீர் சுற்றிவளைப்பில் 47000 டொலர்கள் கண்டுபிடிப்பு


கொழும்பு, பொரலஸ்கமுவ பிரதேசத்தில் 47,000 அமெரிக்க டொலர்களை பணம் தூய்மையாக்கல் செய்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை நாணயத்தில் அதன் பெறுமதி 1 கோடி 71 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் திடீர் சுற்றிவளைப்பில் 47000 டொலர்கள் கண்டுபிடிப்பு

வங்கியில் வைப்பிடாமல் உண்டியல் முறையின் கீழ் டொலரின் தற்போதைய மதிப்பை விட அதிகமாக விலையில் தனிநபர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டு மற்றும் அதற்கு உதவிய  40 வயதுடைய நபரும் 52 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கிருலப்பனை உள்ள சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் திடீர் சுற்றிவளைப்பில் 47000 டொலர்கள் கண்டுபிடிப்புSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.