பள்ளி மாணவன் வெட்டிப் படுகொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலைமறியல்

திருக்கோவிலூர் அருகே 12-ஆம் வகுப்பு மாணவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரை என்பவரின் மகன் கோகுல்ராஜ் (17). 12 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், திருக்கோவிலூர் டி.கீரனூர் பகுதி புறவழிச்சாலையில் கத்தியால வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
image
இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் காவல்நிலைய ஆய்வாளர் பாபு தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கோகுல்ராஜ் பிறந்தநாள் விழா கொண்டாட சென்றது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட மாணவன் காதல் விவகாரத்தில் திட்டமிட்டு வரவழைக்கப்பட்டு போதையில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
image
இந்நிலையில் கோகுல்ராஜ் உறவினர்கள், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்யக் கோரி கீரனூர் புறவழிச்சாலையில் மறியலில் போராட்டத்தில்ட ஈடுபட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.