மாநில அளவிலான கலைநிகழ்ச்சி காரைக்கால் கல்லுாரி முதலிடம்

காரைக்கால், : மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான கலைநிகழ்ச்சியில் காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவர்கள் முதல் இடம் பிடித்தனர்.மதுரையில் கடந்த 11ம் தேதி மாநில அளவிலான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 48க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.காரைக்கால், நெடுங்காடு பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லுாரியில் பயிலும் 20 மாணவர்கள், பேராசிரியர் நடராஜன் தலைமையில் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இதில் 34 போட்டிகளில் வேளாண் கல்லுாரி மாணவர்கள் முதல் இடம் பிடித்து கோப்பை வென்றனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி முதல்வர் புஷ்பராஜ் பாராட்டினார். துணை பேரா சிரியர் ராமதாஸ், ஆலோசகர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.