யஷின் கேஜிஎப்-3 படத்தின் புதிய அப்டேட் வெளியானது

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடித்த கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்துள்ளன. இதில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் கேஜிஎப் -2 படம் உலகம் முழுவதும் 1200 கோடி வசூல் செய்திருக்கிறது. கன்னட படங்களில் இது மிகப்பெரிய வசூல் சாதனை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே கேஜிஎப்-3 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அப்படக்குழு ஒரு தகவல் வெளியிட்டிருந்தது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளன. மேலும் கேஜிஎப்-3 படத்தை 2024ம் ஆண்டு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் இரண்டு பாகங்களில் இருந்து இந்த மூன்றாம் பாகத்தில் மாறுபட்ட கெட்டப்பில் யஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.