கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.840 லிருந்து ரூ.250 ஆக குறைப்பு: பயோலாஜிக்கல் இ நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ 840 லிருந்து ரூ 250 ஆக குறைக்கப்பட்டுள்ளது என பயோலாஜிக்கல் இ நிறுவனம் தெரிவித்துள்ளது. வரி நிர்வாகம் கட்டணம் சேர்த்து ஒரு டோஸ் விலை ரூ 400 ஆக இருக்கும் என பயோலாஜிக்கல் இ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பயாலஜிக்கல்-இ நிறுவனத்தார் கொரோனாவுக்கு எதிராக கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இங்கு இந்த தடுப்பூசி 12 முதல் 14 வயது வரையிலானோருக்கு செலுத்தப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் அவசர பயன்பாட்டு பட்டியலில் இந்த தடுப்பூசியை இடம் பெறச்செய்வதற்கு பயாலஜிக்கல்-இ நிறுவனத்தார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த தருணத்தில் இந்த தடுப்பூசியை பிற நாடுகள் அங்கீகரிப்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ 840 லிருந்து ரூ 250 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பயாலஜிக்கல் இ நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர். இதன்படி தனியார் தடுப்பூசி மையங்களுக்கு, சரக்கு மற்றும் சேவை வரி உட்பட, தனது கொரோனா தடுப்பூசியான கோர்பேவாக்சின் விலையை ரூ. 840 லிருந்து ரூ. 250 ஆகக் குறைத்துள்ளதாக மருந்து தயாரிப்பு நிறுவனமான பயாலஜிக்கல்-இ தெரிவித்துள்ளது. மேலும் வரிகளுடன் சேர்ந்து ரூ.400 என்ற விலையில் பயனாளிகளுக்கு தடுப்பூசி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தடுப்பூசியின் விலை தனியார் தடுப்பூசி மையங்களில்,  வரி மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் உட்பட, ஒரு டோஸ் ரூ.990 ஆக இருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டபோது, கோர்பேவாக்ஸ் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு அதன் விலை ரூ. 145 என அரசின் தடுப்பூசி திட்டத்திற்காக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.