புதிய தசாப்தம் தொடங்குகிறது…நோட்டோவில் இணைவதை உறுதிசெய்த ஸ்வீடன்: நெருக்கடியில் ரஷ்யா!


பின்லாந்தை தொடர்ந்து ஸ்வீடனும் மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைவது தொடர்பான விண்ணப்பத்தை விரைவில் சமர்ப்பிக்க இருப்பதாக தனது இறுதி முடிவை அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை தொடர்ந்து, நார்டிக் நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் பல தசாப்தங்களாக கடைப்பிடித்து வந்த ராணுவ அணிச் சேரா கொள்கையில் இருந்து வெளியேறி மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்தனர்.

இது தொடர்பான பொது வாக்கெடுப்புகளையும், நாடாளுமன்ற விவாதங்களையும் இரு நாடுகளும் பல கட்டங்களாக நடத்தி வந்த நிலையில், நேற்று மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் பின்லாந்து இணைவதை அந்த நாட்டின் ஜனாதிபதி Sauli Niinisto மற்றும் பிரதமர் Sanna Marin உறுதிபடுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, பின்லாந்தின் நெருங்கிய நட்பு நாடான ஸ்வீடனும் நோட்டோவில் இணைவது தொடர்பான இறுதி முடிவை அறிவிக்ககூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

புதிய தசாப்தம் தொடங்குகிறது...நோட்டோவில் இணைவதை உறுதிசெய்த ஸ்வீடன்: நெருக்கடியில் ரஷ்யா!

இந்தநிலையில், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பத்திரிக்கையாளரை சந்தித்த அந்தநாட்டின் பிரதமர் மாக்டலேனா ஆண்டர்சன் மற்றும் எதிர்கட்சி தலைவர் கிறிஸ்டர்சன், நோட்டோவில் இணைவது தொடர்பான ஸ்வீடனின் இறுதி முடிவை அறிவித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மாக்டலேனா ஆண்டர்சன், நாம் தற்போது ஒரு தசாப்தத்தில் இருந்து வெளியேறி புதிய தசாப்தம் ஒன்றை தொடங்கவிருக்கிறோம் என தெரிவித்தார்.

புதிய தசாப்தம் தொடங்குகிறது...நோட்டோவில் இணைவதை உறுதிசெய்த ஸ்வீடன்: நெருக்கடியில் ரஷ்யா!

ஆனால் நோட்டோவில் இணைவது தொடர்பான நடவடிக்கைகள் நடைப்பெறும் போது, ஸ்வீடன் மிகவும் பாதிக்கப்படகூடிய நிலையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய ராணுவ கூட்டமைபான நோட்டோவில் இணைவது தொடர்பாக நாட்டு மக்களிடம் வேறுபட்ட பல்வேறு கருத்துகள் உருவாகின மற்றும் அனைவரும் இன்னமும் ஸ்வீடன் மீது அக்கறை கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

புதிய தசாப்தம் தொடங்குகிறது...நோட்டோவில் இணைவதை உறுதிசெய்த ஸ்வீடன்: நெருக்கடியில் ரஷ்யா!

மேலும் நோட்டோவில் விண்ணப்பிக்கும் நாள் குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை, ஆனால் பின்லாந்துடன் இணைந்து விண்ணப்பமானது சமர்பிக்கபடும் என்றும், இது தொடர்பான விண்ணப்பம் ஏற்றுகொள்ளப்பட நாள்கள் எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: நோட்டோ தொடர்பான இறுதி முடிவை அறிவித்த பின்லாந்து: ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவு

புதிய தசாப்தம் தொடங்குகிறது...நோட்டோவில் இணைவதை உறுதிசெய்த ஸ்வீடன்: நெருக்கடியில் ரஷ்யா!

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஸ்விடன் எதிர்கட்சி தலைவர் கிறிஸ்டர்சன், நோட்டோவில் ஸ்வீடன் இணையும் முடிவை எதிர்கட்சி முழுமனதுடன் ஆதரிப்பதாகவும், இது வரலாற்று முடிவு, மேலும் இது கட்சி அரசியல் பற்றியது அல்ல, நாட்டின் பாதுகாப்பு முடிவு என தெரிவித்துள்ளார்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.