மதுரவாயல் – துறைமுகம் 21 கி.மீ. நீள பறக்கும் சாலை! முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது…

சென்னை: மதுரவாயல் – துறைமுகம்  இடையிலான 21 கி.மீ. நீள பறக்கும் சாலை திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று  ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட சாலை திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இந்த ஒப்பந்தம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் – தமிழ்நாடு அரசு – சென்னை துறைமுகம் – கடற்படை இடையே சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்  மத்தியசாலை, போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சாலையானது 21 கி.மீ. நீளம் உடன் 7 என்ட்ரி, 6 எக்சிட் கூடிய டபுள் டக்கர் பாலமாக அமைய உள்ளது  இந்த சென்னை மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைமொத்த திட்டத்தின் மதிப்பு 5,885 கோடி ரூபாய் ஆகும்.

சென்னை கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும். ஒரு பாலம் நேப்பியர் டூ கோயம்பேடு செல்லவும் , இன்னொரு பாலம் கோயம்பேடு டூ நேப்பியர் செல்லவும் ஒன் வே போல பயன்படுத்தப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

20.6 கிலோ மீட்டர் தூர பாலத்தில் மொத்தம் 7 என்ட்ரி இருக்கும். அதாவது வேறு வேறு சாலைகளில் இருந்து பாலத்திற்குள் 7 இடங்களில் இணைய முடியும். முக்கிய இடங்களில் மட்டும் இந்த 7 இணைப்புகள் வைக்கப்படும். அதேபோல் பாலத்தில் இருந்து வெளியேற 6 இடங்களில் எக்சிட் வைக்கப்படும். அதாவது இரட்டை அடுக்கு பாலம் உள்ள பாதையில் பாலத்தில் இருந்து வெளியேற 6 எக்சிட் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை மதுரவாயல் – துறைமுகம் சாலை திட்டத்திற்கு வருகிற 26ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த ஒப்பந்தம் மூலம் அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த சென்னை மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் மீண்டும் புத்துயிர் பெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.