ஜப்பான் திரைப்பட விழாவில் விருதுகளை குவிக்கும் 'சூரரைப் போற்று'

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது . ஜிவி பிரகாஷின் இசைஅமைத்து இருந்தார். இந்த படம் வெளியானத்திலிருந்து சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்று வருகிறது. தற்போது ஜப்பானில் நடைபெறும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விருதுகளில் 6 விருதுகளை வென்றுள்ளது.

இந்த விருது விழாவில் சூரரைப் போற்று வென்ற விருதுகளின் விபரம்

சிறந்த நடிகர்- சூர்யா,

சிறந்த இயக்குனர்- சுதா கொங்கரா

சிறந்த இசையமைப்பாளர் – ஜி.வி.பிரகாஷ்

2020 வருடத்தின் சிறந்த தமிழ் படம்- சூரரைப்போற்று

சிறந்த தயாரிப்பு நிறுவனம்- 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம்

சிறந்த கலை இயக்குனர்- ஜாக்கி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.