பணவீக்கம் பெரும் தொல்லை.. இந்திய முதலீட்டாளர்களின் திட்டம் இதுதானா..?!

தங்கம் விலை உயர்வு மற்றும் கடந்த நிதியாண்டில் பதிவான வரலாறு காணாத தங்கம் இறக்குமதி அளவை அடிப்படையாகக் கொண்டு இந்த நிதியாண்டில் விலைமதிப்பற்ற தங்கத்திற்கான தேவை இந்தியாவில் பெரிய அளவில் குறையும் என்று உலகத் தங்க கவுன்சில் கணித்தது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு அறிக்கை பல முதலீட்டாளர்களை யோசிக்க வைத்துள்ளது.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. தங்கம் விலை உயர்வு..!

தங்கம் விலை

தங்கம் விலை

தங்கம் விலை கொரோனா தொற்றுத் துவங்கியதில் இருந்து அதிகப்படியான விலையில் இருக்கும் நிலையில், சாமானிய மக்கள் வாங்க முடியாத நிலை உருவானது. இந்நிலையில் தான் வோர்ல்டு கோல்டு கவுன்சில் விலை உயர்வு, இறக்குமதி அளவீட்டை வைத்து இந்தியாவில் தங்கத்திற்கு டிமாண்ட் குறைவாகத் தான் இருக்கும் எனத் தெரிவித்தது.

தங்கம் மற்றும் தங்க நகை விற்பனை

தங்கம் மற்றும் தங்க நகை விற்பனை

இந்த நிலையில் இந்த வெளிநாட்டு தரகு நிறுவனத்தின் அறிக்கையில் இந்திய குடும்பங்கள் பணவீக்கத்தின் பாதிப்புகளைக் குறைக்கவும், எளிய முதலீடாகத் தங்கம் மீது முதலீடு செய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதன் வாயிலாகத் தங்கம் மற்றும் தங்க நகை விற்பனை சூடுபிடிக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறுகிறது.

பணவீக்கம்
 

பணவீக்கம்

அதாவது பணவீக்கத்தின் தாக்கத்தால் கார், வீடு, ரியல் எஸ்டேட், போன்ற அனைத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் முதலீடு செய்தால் நீண்ட கால அடிப்படையில் கட்டாயம் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு இல்லை. இந்த நிலையில் பெரும்பாலான மக்கள் தங்கள் முதலீட்டை தங்கம் மீது திருப்ப அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

விலை உயர்வு

விலை உயர்வு

கிட்டத்தட்ட அனைவரும் யோசிக்கும் விஷயமாகவே இது உள்ளது. விலைவாசி உயர்வால் அனைத்து உற்பத்தி மற்றும் இறக்குமதி பொருட்களின் விலையும் 5 முதல் 10 சதவீதம் உயர்ந்திருக்கும் நிலையில் கணிசமாகச் சரிந்துள்ள தங்கத்தின் மீது முதலீடு செய்வது லாபத்தை அளிக்கக் கூடும்.

தங்கம் இறக்குமதி

தங்கம் இறக்குமதி

2022ஆம் நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 33.34 சதவீதம் உயர்ந்து 46.14 பில்லியன் டாலராக 837 டன்களாக உள்ளது. இது 2021ஆம் நிதியாண்டில் அளவை விடவும் 1.5 மடங்கு அதிகமாகவும். கொரோனா தொற்றுக் காலத்தில் தங்கம் விலை அதிகமாக இருந்த காரணத்தால் யாரும் வாங்காமல் இருந்த நிலையில் 2022ல் அதிகளவில் வாங்க துவங்கினர்.

கொரோனா

கொரோனா

இதேபோல் கொரோனாவுக்கு முந்தைய 2016-2020 வரையிலான காலகட்டத்தில் சராசரி அளவை விடவும் 12 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம் நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு அதிகரிக்க வழிவகுத்தது, ஜிடிபியில் 3 சதவீத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Raising Inflation people may buy more gold as a supporting investment system

Raising Inflation people may buy more gold as a supporting investment system பணவீக்கம் பெரும் தொல்லை.. இந்திய முதலீட்டாளர்களின் திட்டம் இதுதானா..?!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.