பள்ளிக் கல்விக்கு காமராசர், உயர்கல்விக்கு கருணாநிதி! சாய் பல்கலைக்கழக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை; பள்ளிக் கல்விக்கு காமராசர் என்றால்,  உயர் கல்விக்கு கருணாநிதி என சாய் பல்கலைக்கழக விழாவில் பேசி முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள சாய் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து, புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  “இந்த அரசு உயர் கல்வியில் முதலில் இருந்தே மிகுந்த கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. இதனால்தான், மறைந்த முதல்வர் கருணாநிதி அப்போதே நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். இன்று தேசிய உயர் கல்வி மாணவர் சேர்க்கையானது 27.1 விழுக்காட்டை விட அதிகமாக, அதாவது 51.4 விழுக்காடு மாணவர்கள் தமிழகத்தில் உயர் கல்வி பெற்றுள்ளனர் என்றால், அந்தப் பெருமை முழுவதும் மறைந்த முதல்வர் கருணாநிதியையே சாரும்.

பொறியியல் மற்றும் மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்தது மட்டுமின்றி, அதற்கான உச்ச நீதிமன்ற அங்கீகாரத்தையும் அவர் பெற்றுத் தந்தார். எனவேதான், சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது நான் குறிப்பிட்டுச் சொன்னேன். பள்ளிக் கல்விக்கு காமராஜர் என்று சொன்னால், கல்லூரிக் கல்விக்கு கருணாநிதி என்று கூறினேன்.

உயர் கல்வியில் அகில இந்திய மாணவர் சேர்க்கை விகிதத்தை தாண்டி, தமிழகம் முன்னணியில் இருப்பதற்கு பல காரணிகள் உள்ளன. இருந்தாலும், தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும், ஆராய்ச்சி படிப்புகளில் சேரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் மிக முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

உலகிலேயே திறமையான மாணவர்கள் தமிழகத்தில் இருந்துதான் கிடைக்கின்றனர் என்ற நிலையை உருவாக்கவே ” நான் முதல்வன்” என்ற திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

#tdi_1 .td-doubleSlider-2 .td-item1 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/Sai-stlaiin-01.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item2 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/Sai-stlaiin-02.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item3 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/Sai-stlaiin-03.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item4 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/Sai-stlaiin-04.jpg) 0 0 no-repeat;
}

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.