இலங்கையில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்த நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். இலங்கை மக்கள் தங்களுக்கு தேவையான முக்கியமான பொருள்களைக்கூட இறக்குமதி செய்வதற்கு பணம் இல்லாமல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
ராகுல் காந்தி தொடர்ச்சியாக மத்திய அரசிடம் பெட்ரோல், டீசல் விலை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Distracting people won’t change the facts. India looks a lot like Sri Lanka. pic.twitter.com/q1dptUyZvM
— Rahul Gandhi (@RahulGandhi) May 18, 2022
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில், “பெட்ரோல் விலை உயர்வு, மதக்கலவரம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இலங்கையின் நிலையே தற்போது இந்தியாவில் தொடர்ந்து வருகிறது. மக்களை திசை திருப்புவது மூலம் உண்மைகளை மாற்ற முடியாது. இந்தியாவும் இலங்கையைப் போல காணப்படுகிறது’’ எனப் பதிவிட்டிருக்கிறார்.
மேலும், அவர் பகிர்ந்துள்ள அந்த கிராஃப் பெட்ரோல் விலை உயர்வு, மதக்கலவரம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை எவ்வாறு இலங்கையிலும், இந்தியாவிலும் இருக்கின்றன என்பதைக் குறிப்பிடும் விதமாக அமைந்துள்ளது.