ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பஸ் ஓட்டிய ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. மீது வழக்கு

பெங்களூரு: கர்நாடக பா.ஜனதாவில் உள்ள சர்ச்சை நாயகர்களில் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வும் ஒருவர். முன்னாள் மந்திரியான இவர் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை இழப்பார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் மந்திரிசபை விரிவாக்கம் குறித்தும், கட்சியில் உள்ள தலைவர்கள் குறித்தும் அடிக்கடி பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் இவர் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் நேற்று தாவணகெரே மாவட்டம் பைரனஹள்ளி கிராமத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் தங்கள் கிராமத்திற்கு சரிவர பஸ் சேவை இல்லை என்று கூறினர். இதையடுத்து ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ, தாவணகெரே டவுன் பகுதியில் இருந்து ஒரு அரசு பஸ்சை(கே.எஸ்.ஆர்.டி.சி.) பைரனஹள்ளி கிராமத்திற்கு ஓட்டி வந்தார்.

அந்த பஸ்சில் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் இருந்தனர். இருப்பினும் ரேணுகாச்சார்யாவே பஸ்சை ஓட்டி வந்தார். கிராமத்திற்கு பஸ் வந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ரேணுகாச்சார்யா பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களை ஓட்ட ஓட்டுனர் உரிமம் பெறாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அவர் மீது தாவணகெரே புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.