பாலியல் புகாரால் 10 மில்லியன் இழந்த எலான் மஸ்க்..!| Dinamalar

வாஷிங்டன்: பாலியல் குற்றச்சாட்டு புகார் காரணமாக, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 10 மில்லியன் டாலர் குறைந்து போனது.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், கடந்த 2016ல் கலிபோர்னியாவுக்கு தனி விமானத்தில் பயணித்தார். அப்போது விமானப்பணி பெண்ணிடம், மசாஜ் செய்யுமாறு கூறி, பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகவும், இதனை மறைப்பதற்காக 2018ல் 25 ஆயிரம் டாலர் தொகையை ஸ்பேக் எக்ஸ் நிறுவனம் மூலம் அப்பெண்ணுக்கு கொடுக்கப்பட்டதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த எலான் மஸ்க், டுவிட்டரில் ‘ எனக்கு எதிரான தாக்குதல்களை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இது ஜனநாயக கட்சியினரின் வழக்கமான, கேவலமான நாடகம். ஆனால் ஒரு நல்ல எதிர்காலத்திற்காகவும், உங்கள் கருத்து சுதந்திரத்திற்காகவும் போராடுவதில் இருந்து என்னை எதுவும் தடுக்காது என தெரிவித்திருந்தார்.

இதனிடையே பாலியல் குற்றச்சாட்டுக்கு கூறுவதற்கு முன்னதாக வியாழன்று, புளூம்பெர்க் பில்லியனர் பட்டியலில், எலான் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு 212 பில்லியன் டாலராக இருந்தது. பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து ஒரே நாளில் 10 மில்லியன் டாலர்கள் சரிவடைந்து, 201 பில்லியன் டாலராக குறைந்து போனது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.