பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் மோசடி: ஆட்சியரிடம் புகார் அளித்த கிராம மக்கள்!

விழுப்புரம் மாவட்டம் முகையூர் பகுதியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் மனு  அளித்தனர். ஆயந்தூர் ஊராட்சியில் 13பேருக்கு வீடுகள் கட்டாமலேயே, கட்டியதாக போலி ஆவணங்கள் தயாரித்து கிராம ஊராட்சி செயலாளர் பணத்தை  கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனை பொதுமக்கள் சமூக தணிக்கையின் மூலம் கண்டறிந்தது அதற்கான ஆவணங்களை ஆட்சியரிடம் வழங்கினர். பயனாளிகளுக்கு தெரியாமலே அவர்களுக்கு போய் சேரவேண்டிய பணத்தை ஊராட்சி செயலாளர் மற்றும் மனைவி ஆகிய இருவரும்  மோசடி செய்ததாக புகார் தெரிவித்தனர்.   மேலும் இதில் பலருக்கும் தொடர்புடையாக கூறியுள்ளனர். இதனால் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம்  வலியுறுத்தியுள்ளனர்.
கிராம மக்கள் அளித்துள்ள புகார் மனுவில், “விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியம் ஆயந்தூர் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு (ஊரகம்) திட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் இளங்கோவன் தலைமையில், முகையூர் ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் முகையூர் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் இணைந்து பலவகையாக மோசடிகள் நடத்தி உள்ளனர்.
13 நபர்களுக்கு வீடு வழங்கி கட்டப்படாத வீடுகளுக்கு கட்டப்பட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து கிராம ஊராட்சி செயலாளர் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தாமல் பயனாளி அல்லாத நபருக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி கையாடல் செய்துள்ளார்.
image
அதை நாங்கள் சமூக தணிக்கையின் மூலம் கண்டறிந்தது அதற்கான ஆவணங்களை கீழே இணைத்துள்ளோம். ஊராட்சி செயலாளர் இளங்கோவன் தலைமையில் முகையூர் ஒன்றியம் வட்டார ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் முகையூர் வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கீழ்கண்ட பயனாளிகளின், கிருஷ்ணன், சுப்ரமணி, தங்கவேல், சகுந்தலா ரவி, தனபாக்கியம், ஆறுமுகம், ராஜகோபால் ஆகியோர்களின் தவணை தொகையை பயனாளிகளின் வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் கட்டியதாக கணக்கு காட்டியுள்ளனர்.
அவர்களின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி, பயனாளிகளுக்கு தெரியாமலே அவர்களுக்கு போய் சேரவேண்டிய பணத்தை மோசடியாக ஊராட்சி செயலாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் முகையூர் கிளையின் வேலை செய்வதால் இருவரும் இணைத்து பயனானிகளின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடியாக எடுத்துள்ளனர்.
image
மேலும் ஊராட்சி செயலாளர் இளங்கோவனின் அதிகாரத்தை பயன்படுத்தி அவரின் நண்பர் ஆறுமுகம் சட்டத்திற்கு புறம்பாக ஆயங்தூர் ஊராட்சிக்குள் பயனாளிகளுக்கு சேரவேண்டிய திட்டத்தை , விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியம் சென்னாகுணம் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் கீழ் வீடு கட்டி , முடிக்கப்பட்டுள்ளது. இதனால் முறையாக ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு போய் சேரவேண்டிய திட்டத்தின் நோக்கத்தை மாற்றியுள்ளார்.
அதனை நாங்கள் சமூக தணிக்கையின் மூலம் கண்டறிந்து அதற்கான ஆவணங்களை இணைத்துள்ளோம்” என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.