புதுடெல்லி,
லாக்போரா சர்வதேச தடகள போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஆந்திர வீராங்கனை ஜோதி யர்ராஜி 13.11 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.
இதற்கு முன்பு கடந்த 10-ந் தேதி சைபிரஸ் நாட்டில் நடந்த போட்டியில் 22 வயதான ஜோதி 13.23 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்து இருந்தார். தற்போது அவர் தனது சொந்த சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார்.
Related Tags :