Congress MP: பிரியங்காவை எம்பி ஆக்க சிவகுமார் தீவிரம்… சோனியாவின் முடிவு என்ன?

தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விரைவில் காலியாக உள்ள 57 எம்பி பதவிகளுக்கு புதிய நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி (ஜூன் 10) நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து 6 எம்பிகளும், கர்நாடக மாநிலத்தில் இருந்து 4 எம்பிக்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த நான்கு எம்பிக்களில் ஆளும் பாஜகவில் மூன்று பேருக்கும், காங்கிரசில் இருந்து ஒருவருக்கு வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தியை கர்நாடகா காங்கிரஸ் சார்பில் எம்பியாக தேர்ந்தெடுக்க, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் தீவிரம் காட்டி வருகிறார்.

இதுகுறிதது அவர், ராஜஸ்தானில் அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் சிந்தனையாளர்கள் கூட்டத்தில் சோனியாவிடம் நேரில் வலியுறுத்தியதுடன், தொலைபேசியிலும் அவருடன் பேசி வருவதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், சிவகுமாரின் கோரிக்கையை பிரியங்கா நிராகரித்துவிட்டதாக தெரிகிறது. ஏற்கெனவே தானும், ராகுலும் எம்பி ஆக உள்ள நிலையில், பிரியங்காவும் எம்பியானால், அது பாஜகவின் குடும்ப அரசியல் பிரசாரத்துக்கு மேலும் வலுசேர்த்துவிடும் என்பதால், இந்த விஷயத்தில் முடிவெடுக்க சோனியாவும் தயக்கம்காட்டி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விஷயத்தில் இன்னும் ஓரிரு தினங்களில் கட்சி தலைமை முடிவெடுக்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துல்ளன.

கர்நாடகத்தில் இருந்து பிரியங்காவை எம்பி ஆக்க மாநில காங்கிரஸ் தலைமை முயற்சித்து வரும் நிலையில், அங்கு
ராஜ்யசபா எம்பி
பதவிக்கு மூன்று வேட்பாளர்களை அறிவிக்க இருந்த பாஜக, தற்போது நான்கு பெயர்களை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.