திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை குறித்து போலீசில் புகார் அளித்ததால், பெண் கவுன்சிலர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நெற்குன்றம் பகுதியில் கஞ்சா விற்ற நபர்களை, தட்டிக் கேட்டவர்களை, விக்னேஷ் என்பவன் கத்தியால் வெட்டி விட்டு தலைமறைவானதாகச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வார்டு கவுன்சிலர் வார்டு கவுன்சிலர் பாப்பாத்தி அம்மாள் மகனிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாப்பாத்தி அம்மாள் மகன் பிரபு, காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், பாப்பாத்தி அம்மாள் வீட்டில் மர்ம நபர் ஒருவர் நாட்டு குண்டு நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனை கஞ்சா விற்பனை செய்ய விக்னேஷ் என்பவர் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.