எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சிவகார்த்திகேயன் – இயக்குனர் மிஸ்கின் காம்போ

தமிழ் திரையுலகில் தனக்கென ரசிகர்களை வைத்துள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலானது.

ஏற்கனவே இவரது நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது SK 21 படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி மற்றும் மடோன் அஸ்வின் ஆகிய இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மடோன் அஸ்வின் இயக்க இருக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஸ்கின் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

சிவகார்த்திகேயனுடன் – மிஸ்கின் காம்போ குறித்த அறிவிப்பு இந்த பேச்சுவார்த்தை வெற்றிபெற்ற பின் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கமிட்டாகி இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.