வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐ தராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐ தராபாத்தில் சொகுசு காரில், சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மகன்,மாநில சிறுபான்மை வாரிய தலைவரின் மகன் உள்ளிட்ட 5 சிறார்களுக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 1 ம் தேதி ஐ தராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸ் ஸ்டேசன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சொகுசு காரில் சிறுமி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. முதலில் ஐபிசி 354 பிரிவு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து வழக்கை ஐபிசி 376 (கூட்டு பலாத்காரம்) பிரிவிற்கு மாற்றினர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், இந்த சம்பவத்தில் எம்.எல்.ஏ., மகன் மற்றும் சிறுபான்மை வாரியத்தின் மகன் உள்ளிட்ட 5 பேருக்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை தான் அடையாளம் காட்ட முடிந்தது. அந்த நபரும் சிறார் தான். தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக கூறினர்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.
Advertisement