கசங்கிய புடவையிலும் பளபளப்பாக இருக்கும் பூஜா ஹெக்டே

'பீஸ்ட்' படக் கதாநாயகி பூஜா ஹெக்டே, சமூக வலைதளத்தில் அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களைப் பதிவிடுபவர். தற்போது வித்தியாசமாக புடவை அணிந்த போட்டோக்களைப் பதிவிட்டுள்ளார்.

“புன்னகை, பிரகாசம், ஒளி வீசு… அனைத்து விஷயங்களும் கோல்டன்” எனப் பதிவிட்டுள்ளார். லேசான புன்சிரிப்புடன் கூடிய புகைப்படங்கள் அவரது ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் என்பது உறுதி. கசங்கிய புடவை போல தோற்றமளிக்கும் அந்தப் புடவையிலேயே பூஜா இவ்வளவு பளபளப்பாக இருக்கிறார் என்றால் பட்டுப் புடவையிலும், பருத்திப் புடவையிலும் எவ்வளவு அழகாக இருப்பார் என ரசிகர்கள் யோசிப்பார்கள்.

“அட, இந்த மாடல் புடவை நல்லாருக்கே” என பெண் ரசிகைகள் அந்தப் புடவை எங்கு கிடைக்கும் என இந்நேரம் கூகுள் சர்வரே டவுன் ஆகும் அளவிற்கு தேட ஆரம்பித்திருப்பார்கள்.
'பீஸ்ட்' படத்திற்குப் பிறகு பூஜா இன்னும் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. தற்போது தெலுங்கு, ஹிந்தியில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.