நிழல் உலக தாதா லாரன்ஸ் திடுக் தகவல்| Dinamalar

புதுடில்லி-பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூசேவாலாவை பழிவாங்கும் நோக்கத்தில், தன் கும்பலை சேர்ந்த ஆட்கள் சுட்டுக் கொன்றதாக, நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னாய் போலீசிடம் தெரிவித்தார்.

சந்தேகம்

பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த பாடகரும், காங்., பிரமுகருமான சித்து மூசேவாலா, 28, சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை, டில்லி போலீசின் சிறப்பு பிரிவு விசாரித்து வருகிறது. பஞ்சாபை சேர்ந்த நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மீது, போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இவர் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஆயுத வழக்கில் கைதாகி இவர் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை காவலில் எடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:அகாலி தளத்தைச் சேர்ந்த இளம் தலைவர் விக்ரம்ஜித் சிங் கடந்த ஆண்டு ஆகஸ்டில் கொல்லப்பட்டார். இந்த கொலையில் மூசேவாலாவுக்கு தொடர்புள்ளது. அதற்கு பழிவாங்கவே, தன்னுடைய கும்பலைச் சேர்ந்த சிலர் மூசேவாலாவை சுட்டுக் கொன்றனர் என்ற தகவலை லாரன்ஸ் தெரிவித்தார்.

மூன்று நாள் காவல்

ஆனால், கொலையில் ஈடுபட்ட மற்ற நபர்கள் யார் என்ற தகவல்களை அவர் தெரிவிக்க மறுக்கிறார். விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைக்கவில்லை.இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.இந்த விசாரணைக்கு பின், மற்றொரு துப்பாக்கி சூடு வழக்கு தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோயை, பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை மூன்று நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

பாடகர் வீட்டில் முதல்வர்!

பஞ்சாபின் மான்ஸா மாவட்டத்தின் மூசா கிராமத்தில் உள்ள சித்து மூசேவாலா வீட்டுக்கு, அம்மாநில முதல்வர் பகவந்த் மான் நேற்று சென்றார். மூசேவாலா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மான், ஒரு மணி நேரம் அவரது வீட்டில் செலவிட்டார். ”மூசேவாலா படுகொலை தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்,” என, முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார். மூசேவாலா வீட்டுக்கு வந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., குர்ப்ரீத் சிங் பானாவாலியை பொது மக்கள் தடுத்து நிறுத்தினர்.

latest tamil news

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.