Australia Cabinet: ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றில் முதல் முறையாக..!

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 21 ஆம் தேதி (மே 21) பொது தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஸ்காட் மாரிசன் தலைமையிலான ஆளும் தாராளவாத கட்சியை அதிரடியாக வீழ்த்தி, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் அந்தோணி அல்பானீஸ் புதிய பிரதமராக பதவி ஏற்றார்.

அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது. தலைநகர் கான்பெர்ராவில் உள்ள அரசு இல்லத்தில் நடைபெற்ற விழாவில் புதிய அமைச்சர்கள் 30 பேருக்கு கவர்னர் ஜெனரல் டேவிட் ஹர்லி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சர்கள் 30 பேரில் 13 பேர் பெண்கள். இவர்களில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 2 பேரும், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் அடங்குவர்.

US Gun Violence: துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்குங்க! – அதிபர் பைடன் வலியுறுத்தல்

கடந்த ஆட்சியில் 7 பெண்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது 13 பெண்கள் அமைச்சரவையை அலங்கரிக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவின் அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக, அந்நாட்டின் அமைச்சரவையில் இவ்வளவு அதிகமாக பெண்கள் இடம்பெற்றுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.