செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை விமான நிலையத்தில் சிறப்பு கவுண்டர் அமைக்க முடிவு

சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜுலை 27-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி வரை தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது.

இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2,500 க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.

இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் வெளி நாட்டு வீரா், வீராங்கனைகள் அனைவரும் தங்கள் நாடுகளிலிருந்து விமானங்களில் சென்னை விமானநிலையம் வந்து அவா்கள் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்கின்றனா்.

அதைப்போல் போட்டிகள் முடிந்து, தங்கள் நாடுகளுக்கு திரும்பும் போதும் சென்னை விமான நிலையம் வழியாகவே செல்கின்றனா். அதைப்போல் போட்டிகளை காண ஏராளமான வெளிநாட்டு பாா்வையாளா்களும் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதனால் சென்னை விமானநிலையத்தில் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளிநாட்டவா், குறிப்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக வருபவா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே அவா்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை சென்னை விமானநிலையம் உள்நாடு, சா்வதேச முணையங்களில் செய்ய இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு எடுத்துள்ளது.

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள், பார்வையாளர்கள், சிரமம் இல்லாமல் சோதனைகளை விரைந்து முடித்து வெளியேற, உரிய வசதிகள் செய்துத்தர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

அதற்காக குடியுரிமை, சுங்கச்சோதனை, பாதுகாப்பு சோதனை, மருத்துவ சோதனை அனைத்து பிரிவுகளிலும் சிறப்பு தனி கவுண்டா்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் விமான நிலைய உயா் அதி காரிகள், விமானநிறுவன அதிகாரிகள், குடியுரிமை அதிகாரிகள், சுங்கத் துறை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், தமிழக போலீஸ் அதிகாரிகள், உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதல் கட்ட கூட்டத்தில், பல்வேறு அதிகாரிகள் பல விதமான ஆலோசனைகளை தெரிவித்தனர். அப்போது எந்தெந்த பகுதிகளில் எத்தனை சிறப்பு கவுண்டா்கள் அமைப்பது என்று ஆலோசனை நடந்தது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது, விமான நிலையத்திற்கு வரும் பயணியர், சிக்கல்கள் எதிர்கொள்வதை தவிர்க்கவும், விரைவாக வெளி யேறவும் உரிய நட வடிக்கைகள் எடுக்க திட்ட மிடப்பட்டுள்ளது என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்..
சென்னையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.