Free OTT Apps: ஒரு ரூபாய் செலவில்லாமல் ஓடிடி தளங்கள்!

Free OTT Apps: இப்போதெல்லாம் மக்கள் ஓடிடி தளத்தில் திரைப்படங்கள் தொடர்களை பார்க்க விரும்புகின்றனர். பயனர்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில், பல தளங்கள் ஓடிடி சேவைகளை சந்தாதாரர்களுக்கு அளித்து வருகின்றன.

OTT தளத்தில் சந்தாக்கள் மூலம் கிடைக்கும் மொத்த வருவாய் ரூ.54 பில்லியனை எட்டியுள்ளது. இது 2024 ஆம் ஆண்டிற்கும் ரூ.102 பில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இருக்கும் ஓடிடி தளங்களைக் குறித்து பேசுகையில், “சர்வதேச பிராண்டுகளான Netflix, Amazon Prime Video ஆகியவை 40 விழுக்காடு சந்தை மதிப்பைக் கொண்டுள்ளன.

Google Lens: உலக மொழிகள் அனைத்தும் தாய்மொழியில்… கூகுள் லென்ஸ் உதவியுடன் இதை சாத்தியமாக்கலாம்!

மீதமுள்ளவை இந்தியாவில் உள்ள பிராந்திய மொழி தொலைக்காட்சிகளுக்குச் சொந்தமான ஓடிடி தளங்களாகும். அறிக்கையின்படி, இந்திய OTT தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் 17 விழுக்காடு சந்தாதாரர்களுடன் முன்னணியில் உள்ளது.

நீங்களும் OTT உள்ளடக்கத்தைப் பார்க்க விரும்பினால், திரைப்படங்கள், தொடர்கள் போன்றவற்றை ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் பார்க்க முடியும். இந்த சேவையை வழங்கும் சில தளங்களும் உள்ளன.

Netflix Account: ஒரே நேரத்தில் லட்ச கணக்கிலான சந்தாதாரர்களுக்கு குட்பை சொன்ன நெட்பிளிக்ஸ்!

எம்.எக்ஸ் ப்ளேயர் (MX Player):

எம் எக்ஸ் பிளேயர் இந்தியாவின் மிகப்பெரிய OTT இயங்குதளமாக கருதப்படுகிறது. இது இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது. லோக்கல் மொழி முதல் உலக மொழிகளில் கண்டெண்டுகள் கொடுக்கப்படுகிறது.

PM Kisan Yojana: மோடி அரசு டெபாசிட் செய்த ரூ.2,000 உங்கள் வங்கிக் கணக்கில் வந்ததா? எப்படி கண்டுபிடிப்பது!

உலகில் ஒவ்வொரு நாளும் 28 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். இது முற்றிலும் இலவசம். இந்த தளத்தில் வெளியிடப்படும் தொடர்களும், திரைப்படங்களும் மிகவும் பிரபலமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

டிவிஎஃப் பிளே (TVF Play):

டிவிஎஃப் ப்ளே என்பது ஓடிடி தளத்துடன் கூடிய யூடியூப் சேனலாகும். தற்போது யூடியூப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். அதன் சொந்த OTT தளத்தில் 15 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

இந்த OTT இயங்குதளம் இந்திய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானது. வாழ்க்கை முறை, சமூகம் மற்றும் அரசியல், ஸ்டார்ட்அப் குறித்த அசல் பொழுதுபோக்கு கண்டெண்டுகளை இந்த தளத்தில் காணலாம். மேலும், இதன் யூடியூப் பக்கத்தில் வீடியோக்களை இலவசமாகப் பார்க்கலாம்.

ஓடிடி தளங்கள் குறித்த உங்கள் பார்வையை கீழே கருத்துகளாகப் பதிவிடுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.