அமெரிக்காவில் வார இறுதியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா நகரம் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு பிரசித்தி பெற்றது. நேற்று இரவு மக்கள் கூட்டம் அதிகமிருந்த பகுதியில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர்.

மக்கள் அதிகமாகக் கூடும் பகுதி என்பதால் போலீசார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலும் இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 2 தானியங்கி துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தாக்குதலுக்குக் காரணமான நபர் காயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் இச்சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

மேலும் படிக்க | துப்பாக்கி கலாச்சர வன்முறையை தடுக்க முடியாமல் திணரும் அமெரிக்கா

அமெரிக்காவில் அண்மைக்காலமான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வார இறுதி நாட்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. 

டெக்சாஸில் உள்ள பள்ளி, கலிபோர்னியாவில் உள்ள ஒரு தேவாலயம், நியூயார்க்கில் உள்ள சூப்பர் மார்க்கெட் மற்றும் ஓக்லஹோமாவில் உள்ள மருத்துவமனை உட்பட அண்மையில் தொடர்ச்சியாக நடைபெற்றதுப்பாக்கிச் சூடு சம்பவங்களால் அமெரிக்கா அதிர்ந்துள்ளது. இந்த தாக்குதல்களில் 30-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளது…ஜெனிஃபர் லோபஸ் உருக்கம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.