இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமது பிரஜைகளுக்கு ரஷ்ய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அனைத்து ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை நாடு திரும்புமாறு ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் இதன் காரணமாக இலங்கையில் தங்கி இருக்கும் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய சுற்றுலாப் பயணியான பெண்ணொவர்,

ரஷ்ய ஜனாதிபதி கடுமையாக முடிவை எடுப்பார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமது பிரஜைகளுக்கு ரஷ்ய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாங்கள் இலங்கைக்கு 14 நாட்கள் தங்கிருப்பதற்காக வந்தோம். நாங்கள் ஹிக்கடுவையில் தங்கி இருந்தோம். திடீரென ஏற்பட்ட நிலைமை காரணமாக ரஷ்ய அரசாங்கம் பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்புமாறு அறிவித்தது.

இதன் காரணமாக 14 நாட்கள் பயணத்தை 7 நாட்களுக்குள் முடித்துக்கொண்டு ரஷ்யா திரும்புகிறோம். ரஷ்யாவின் ஏரோஃப்லோட் இறுதி விமானத்தில் ஏறுவதற்காக நாங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளோம்.

இதற்கு முன்னர் இலங்கை சுற்றுலா செல்ல சிறந்த நாடு எனக் கூறி எம்மை இலங்கைக்கு அனுப்பியது. எனினும் திடீரென ஏற்பட்ட நிலைமை தொடர்பாக நாங்கள் கவலைக்கு உள்ளானோம்.

இலங்கையில் பயணம் செய்ய எமக்கு டீசல் இருக்கவில்லை. அது போதாமல் மின் துண்டிப்பு. சகல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நாங்கள் மிகவும் விருப்பத்துடன் இலங்கையில் தங்கி பயணங்களை மேற்கொண்டு வந்தோம்.

சுற்றுலாப் பயணிகள் வருவதால், இலங்கைக்கு டொலர் கிடைக்கின்றது. எனினும் இந்த முடிவு காரணமாக இலங்கைக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போகும். ரஷ்ய ஜனாதிபதி இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான முடிவை எடுப்பார்.

ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் வர மாட்டார்கள்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமது பிரஜைகளுக்கு ரஷ்ய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அத்துடன் மீண்டும் இப்படியான சம்பவம் நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக ரஷ்ய சுற்றுலாப் பணியகள் இலங்கை வர மாட்டார்கள்.

ரஷ்ய அரசுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் எழுத்து மூலமான இணக்கங்கள் இருக்கும் நிலையில் அதனை கவனத்தில் கொள்ளாது மேற்குலக நாடு ஒன்றின் சிறிய காப்புறுதி நிறுவனம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் சுற்றுலாத்துறையினர் எதிர்காலத்தை சவாலுக்கு உட்படுத்தி இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கும் பிரதான வழியை மூடிக்கொண்டமை ஆச்சரியத்திற்குரியது எனவும் ரஷ்ய பெண் கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.