சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
சென்னையில் கணேசன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கிய டொயோட்டா இனோவா காரில் உறவினர் வீடு இருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது இன்ஜின் பகுதியில் திடீரென பலத்த சத்தம் கேட்டு, உடனடியாக கார் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
கணேசன் காரில் இருந்து வெளியேற முயன்றபோது காரின் ஸ்மார்ட் லாக் தானாக இயங்கி காரின் கதவுகள் மூடி கொண்ட நிலையில் புகை வந்ததும் காரின் கதவு தானாக திறந்ததால், மயங்கிய நிலையில் இருந்த கணேசனை அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு, பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், கார் தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.