தமிழ்நாட்டின் டாப் 3 தலைவர்கள் யார்? புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள்

Tamilnadu top leader and DMK govt functionalities survey results: தமிழ்நாட்டில் சிறந்த தலைவர்கள் யார் என தனியார் செய்தி தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்து ஓராண்டு நிறைவுப்பெற்றுள்ள நிலையில், ஆட்சியை பற்றி மக்கள் மனநிலை, தலைமையின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகள் எப்படி செயல்பட்டன, தற்போதைய நிலையில் மக்களின் மனம் கவர்ந்த தலைவர் யார் போன்ற கருத்துக் கணிப்புகளை, தமிழ்நாட்டின் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் ஒன்றான புதிய தலைமுறை நடத்தியது. அந்த கருத்து கணிப்பு முடிவுகளின் விவரங்கள் இதோ…

கொரோனாவை திமுக அரசு எப்படி கையாண்டது? என்ற கேள்விக்கு 46% பேர் சிறப்பாக கையாண்டதாகவும், 28.5% பேர் இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எப்படி சமாளித்தீர்கள் என்ற கேள்விக்கு, 48% பேர் மாதச் செலவுகளை பாதித்தது என்றும், 18% பேர் பிற செலவுகளை குறைத்து சமாளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பலம் என்ன என்ற கேள்விக்கு, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என 34.8% பேரும், கொரோனா நிவாரணம் ரூ.4000 என 12.7% பேரும், 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி என 11.9% பேரும் தெரிவித்துள்ளனர்.

நடப்புத் தேர்தல் முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு 42.9% பேர் இப்போதைய நடைமுறை தொடர வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதேநேரம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 24% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை ஏற்கிறீர்களா? என்ற கேள்விக்கு மறுக்கிறேன் என 30.6% பேரும், ஏற்கிறேன் என 25.3% பேரும் தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஓரளவுக்கு ஏற்கிறேன் என 33.3% பேர் தெரிவித்துள்ளனர்.

அதிமுக எதிர்க்கட்சியாக சரிவர செயல்படுகிறதா? என்ற கேள்விக்கு 38% பேர் இல்லை என்றும், சிறப்பாக செயல்படுகிறது என 19.5 பேரும் மிகச் சிறப்பாக செயல்படுகிறது என 15% பேரும் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் கருணாநிதியின் ‘சங்கத் தமிழ்’ நூல்: தஞ்சை தமிழ்ப் பல்கலை. முடிவு

திமுக ஆட்சிக்கு 10க்கு எத்தனை மதிப்பெண் கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு, 18% பேர் 8 மதிப்பெண்களையும், 14% பேர் 5 மதிப்பெண்களையும், 13 சதவீதம் பேர் 7 மதிப்பெண்களையும் அளித்துள்ளனர். கிட்டத்தட்ட 60% பேர் 5 மதிப்பெண்களுக்கு மேல் கொடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் முதலிடத்தில் இருக்கும் தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என 49.1% பேர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து முதலிடத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளார். இரண்டாம் இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். அவருக்கு 16.6% பேர் வாக்களித்துள்ளனர். மூன்றாம் இடத்தில் சீமான் இருக்கிறார். அவருக்கு 13.4% பேர் வாக்களித்துள்ளனர், 4 ஆம் இடத்தில் அண்ணாமலையும், 5 ஆம் இடத்தில் ஓ.பன்னீர்செல்வமும் இருக்கிறார்கள். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 6 ஆவது இடத்தில் இருக்கிறார். விஜயகாந்த் 7 ஆவது இடத்திலும், கமலஹாசன் 8 ஆவது இடத்திலும், தொல்.திருமாவளவன் 9 ஆவது இடத்திலும் உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.