தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பி.ஏ.4 வகை கொரோனா தொற்று 4 பேருக்கும், பி.ஏ.5 வகை கொரோனா தொற்று 8 பேருக்கும் ஏற்பட்டுள்ளது. நாவலூர் பகுதியில் பி.ஏ.4 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 12 பெரும் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.