36 லட்சம் செலவு செய்த 16 வயது சிறுவன்.. ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமை..!

ஆன்லைன் கேம், ஆன்லைன் சூதாட்டம் மூலம் இந்தியாவில் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளது மட்டும் அல்லாமல் பலரின் உயிரை பறித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் மீது எவ்வளவு தடை போட்டாலும், பலர் இதில் மாட்டிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

இதே வேளையில் இளம் தலைமுறையினர் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாவது மட்டும் அல்லாமல் பெற்றோர்கள் சேமித்த பணத்தை அதிகளவில் இதில் இழப்பது தொடர்கதையாகி வருகிறது.

ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை செய்பவரா நீங்க.. கண்டிப்பா இதை படியுங்க..!

16 வயது சிறுவன்

16 வயது சிறுவன்

ஹைதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் மொபைல் போனில் ஆன்லைன் கேம் விளையாடி ரூ.36 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகி, ஃபேன்டஸி கேம்களை விளையாடுவதால் ஏற்படும் நிதிச் சுமை மற்றும் நிதி இழப்புக் காரணமாகப் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வும் நடந்துள்ளது.

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், ஆன்லைன் கேம்களுக்கான பணம் செலுத்துவதற்காகத் தனது தாயின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தினான்.

ப்ரீ பையர் கேம்
 

ப்ரீ பையர் கேம்

ஹைதராபாத் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் படி, இந்த 16 வயது சிறுவன் தனது தாத்தாவின் மொபைல் போனில் ப்ரீ பையர் கேம் செயலியை டவுன்லோடு செய்துள்ளான். இந்தப் போனில் தனது தாயின் வங்கி கணக்கு இணைக்கப்பட்டு உள்ள நிலையில் விளையாட்டிற்காக முதலில் ரூ.1,500 மற்றும் பின்னர் ரூ.10,000 அவரது தாயின் வங்கி கணக்கில் இருந்து பயன்படுத்தியுள்ளான்.

வாழ்நாள் சேமிப்பு

வாழ்நாள் சேமிப்பு

ப்ரீ பையர் கேம் விளையாடுவதற்கு அடிமையாகிவிட்டதால், குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியாமல் பெரும் தொகையைச் செலவு செய்ய ஆரம்பித்துள்ளான். இது எந்த அளவுக்கு என்றால் தனது தாயின் வாழ்நாள் சேமிப்பை மொத்தமாக இந்தக் கேம்-ல் இழந்துள்ளான்.

1500 முதல் 2 லட்சம் வரை

1500 முதல் 2 லட்சம் வரை

11-ம் வகுப்பு படிக்கும், மறைந்த போலீஸ் அதிகாரியின் மகன் தனது தாய் மற்றும் தாத்தா உடன் வாழ்ந்து வருகிறார். ப்ரீ பையர் கேம் விளையாடுவதற்கு முதல் 1500 முதல் 10000 ரூபாய் செலவு செய்த இந்த 16 வயது சிறுவன் சில நாட்களிலேயே ரூ.1.45 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பணம் செலுத்தி வந்தான்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

இந்த நிலையில் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) அவரது தாய் சென்றபோது, கணக்கில் பணம் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

36 லட்சம் ரூபாய் மாயம்

36 லட்சம் ரூபாய் மாயம்

எஸ்பிஐ வங்கி கணக்கில் இருந்த மொத்தம் ரூ.27 லட்சமும், ஹெச்டிஎப்சி வங்கியில் இருந்த 9 லட்சம் ரூபாயும் காணாமல் போனது தெரியவந்தது. இதன் மூலம் ப்ரீ பையர் கேம் விளையாடுவதற்காகச் சுமார் 36 லட்சம் ரூபாய் அளவிலான தொகையை இழந்துள்ளார் இச்சிறுவனின் தாய்.

 சைபர் கிரைம்

சைபர் கிரைம்

இது தனது மறைந்த கணவர் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம் என்றும், அவரது மரணத்திற்குப் பின்பு கிடைத்த இன்சூரன்ஸ், பிஎப் பணப் பலன் இரண்டு வங்கிக் கணக்குகளிலும் வரவு வைக்கப்பட்டது என இச்சிறுவனின் தாய் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் தனது மகனே பணத்தைச் செலவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது எனச் சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

16yr old Hyderabad boy spends Rs 36 lakh in free fire game

16yr old Hyderabad boy spends Rs 36 lakh in free fire game 36 லட்சம் செலவு செய்த 16 வயது சிறுவன்.. ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமை..!

Story first published: Sunday, June 5, 2022, 11:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.