டெல்லி: தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு மீது பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா வெளியுறவுத்துறை கூறியுள்ளது. முன்னதாக முகமது நபிகள் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நவீன் குமார் ஜிந்தால் மற்றும் நுபுர் சர்மா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதனையடுத்து அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டது. இந்த விவகாரம் இந்தியா மட்டுமின்றி, அரபு நாடுகளான சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஈரான், எகிப்து மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. அந்த வரிசையில் பாகிஸ்தான் பிரதமர் கூறியதாவது, நமது அன்புக்குரிய நபிகள் நாயகம் அவர்களைப் பற்றி இந்தியா-வின் பாஜக தலைவரின் புண்படுத்தும் கருத்துக்களை நான் வலுவான வார்த்தைகளில் கண்டிக்கிறேன். இந்தியா மத சுதந்திரத்தை நசுக்குகிறது மற்றும் முஸ்லிம்களை துன்புறுத்துகிறது என்று திரும்பத் திரும்ப பாகிஸ்தான் சொன்னது என அவர் தெரிவித்தார்.இதற்க்கு பதிலாகும் விதமாக இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது, தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு மீது பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும். இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் அதிகபட்ச மரியாதை அளிக்கிறது. மேலும் இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பு பற்றி அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தானுக்கு வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
