160 அடி உயரத்தில் தொங்கும் உணவகம் – அந்தரத்தில் அமர்ந்தபடியே சாப்பிடலாம்!

இமாச்சல பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத்தலமான மணாலியில் முதன்முறையாக பறக்கும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தரத்தில் சாப்பிடும் அனுபவத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பறக்கும் அனுபவத்தையும் இது வழங்குகிறது.
160 அடிக்கும் மேலான உயரத்தில் தொங்கும் இந்த உணவகம் கிரேன் உதவியுடன் அந்தரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 22 பேர் வரை அந்தரத்தில் பறந்துகொண்டே உணவு உண்ணலாம்.
உலகின் மிக உயரமான பறக்கும் உணவகமாக இது கருதப்படுகிறது. 360 டிகிரி சுழலும் 24 இருக்கைகள் கொண்ட ஒரு பெரிய மேசை கிரேன் உதவியுடன் தரையிலிருந்து 160 அடி உயரத்திற்கு மேலே தூக்கப்படுகிறது. அனைத்து விருந்தினர்களும் சீட் பெல்ட்களை அணிந்திருப்பது கட்டாயம். சுற்றுலாப் பயணிகள் தொங்கும் சாப்பாட்டு மேசையில் உணவை ரசிப்பது மட்டுமல்லாமல், உயரத்தில் இருந்து முழு மணாலி நகரம் மற்றும் பனி மூடிய மலைகளின் அழகிய காட்சிகளையும் ரசிக்கலாம்.
FlyDining: 160ft High Hanging Restaurant Thrills Tourists in Manali -  Discover Kullu Manali
இரண்டு மதிய உணவு, ஒரு சூரியன் மறையும் தருண உணவு(மாலை) மற்றும் இரண்டு இரவு உணவு என ஒவ்வொன்றும் 45 நிமிடங்களுக்கு கிடைக்கும். ஐந்து அமர்வுகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கை அல்லது முழுமையான டேபிளை பதிவு செய்யலாம். இந்த அனுபவத்திற்காக ஒவ்வொரு நபருக்கும் ரூ.3,999 வசூலிக்கப்படுகிறது. ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டம் திறக்கப்பட்ட உடனேயே அமோக வரவேற்பைப் பெற்று வருவதாக உரிமையாளர் கூறுகிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.