இந்தியாவில் காதலன் கண் முன்னே பிரித்தானிய பெண்ணிடம் அத்துமீறிய நபரை ஊர்வலமாக அழைத்துச் சென்ற பொலிசார்


இந்தியாவிலுள்ள கோவாவில், தன் காதலன் கண் முன்னே பிரித்தானிய பெண் ஒருவர் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இம்மாதம் (ஜூன்) 2ஆம் திகதி, கோவாவில் பிரித்தானியர்களிடையே பிரபலமான Arambol Beach என்னும் கடற்கரை பகுதியில், ஒருவர் மசாஞ் செய்வதாகக் கூறி அந்த பிரித்தானியப் பெண்ணை வன்புணர்ந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக பொலிசில் புகாரளிக்கவில்லை. பிரித்தானியாவிலுள்ள தன் குடும்பத்தினர் மற்றும் பிரித்தானிய தூதரகத்துடன் கலந்தாலோசித்தபின் அவர் திங்கட்கிழமைதான் பொலிசில் புகாரளித்துள்ளார்.

அவர் புகாரளித்து ஒரு மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட நபரை தாங்கள் கைது செய்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபரை பொலிசார் ஊர்வலமாக அழைத்துவந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அவரது தலையில் கருப்பு கவர் ஒன்றை மாட்டி பொலிசார் அழைத்துவரும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

வரும் திங்கட்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படும் நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட பிரித்தானியப் பெண், அன்று அவரை நேருக்கு நேராக சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் காதலன் கண் முன்னே பிரித்தானிய பெண்ணிடம் அத்துமீறிய நபரை ஊர்வலமாக அழைத்துச் சென்ற பொலிசார்Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.